பருத்தித்துறை கடலுக்குள் இன்று காலை மேகம் கடலை உறுஞ்சிய காட்சிகள் இதோ ( video)
பருத்தித்துறைக் கடலில் இன்று காலை நடந்த இயற்கை அதிசயம்!
இன்று ஞாயிற்றுக்கிழமை(30.10.2022) காலை- 9.30 மணியளவில் யாழ்.பருத்தித்துறைக் கடற்பரப்பில் மேகம் கீழிறங்கி வந்து கடல் நீர் எடுக்கும் அரிய காட்சி….
இது ரொனாடோ எனப்படும் ஒருவகைச் சூழல் காற்று ஆகும்.
சுழல் காற்று என்பது மின்னலையும், இடியையும் தோற்றுவிக்கக்கூடிய முகிலொன்றின் உட்பகுதியிலிருந்து தொடங்கி நிலமட்டம் வரை நீட்சியடைந்த, கூடிய வேகத்துடன் சுழல்கின்ற வளிநிரல் ஆகும்.
இச் சுழல் காற்று சிறிய அளவிலான சூறாவளியாகும். எனினும், இவை சூறாவளியிலும் பார்க்கப் பயங்கரமானவை எனவும் கூறப்படுகிறது.

