புதினங்களின் சங்கமம்

யாழில் நள்ளிரவு வீட்டு புகைக்கூடு வழியாக கீழ் இறங்கி கொடூர வாள் வெட்டு!

கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வீட்டின் புகைக்கூட்டு வழியாக நேற்று அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும், வீட்டில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மட்டுமே தனிமையில் இருந்துள்ள நிலையில் 50 வயதுடைய சோமசுந்தரம் கெங்காதரன் என்ற நபர் மீதே இவ்வாறு சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், கத்தி கூச்சல் இட்ட போதும் அக்கம் பக்கத்தினர் எவரும் உதவிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடி அணிந்திருந்த நிலையில் அவர்களது முகத்தை அடையாளம் காண முற்பட்ட வேளை அவர்கள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து எந்தவிதமான தகவலும் தெரியாத நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் பொலிஸார் மதிய நேரமே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில் பொலிஸாரும் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திர தினத்திலும் சுதந்திர இல்லாமல் இருக்கும் நிலையில் தான் எம் தமிழ் இனம் இருக்கின்றது.

ஆனால் நாட்டில் பாரியவில் போதைப்பொருள் கடத்தல், கொலை கொள்ளை, சட்டவிரோத பணப் பரிமாற்றம், பாலியல் குற்றங்கள், சட்டவிரோத மதுமானம் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் சுதந்திரமான முறையிலேயே அனைத்து குற்றங்களையும் செய்கின்றனர்.