பிணை வைத்து பெரும் கடன் தொகை வாங்காதீர்கள்!! நீதிபதி இளஞ்செழியன் கூறியது ஏன்??
“அரச ஊழியர்களாகிய நீங்கள், உங்கள் மாதாந்த சம்பளத்தைப் பிணையாக வைத்து பெரிய கடன்களை எடுக்காதீர்கள். அதனால் உங்கள் சம்பளத்தில் பெரும் பகுதி கடனுக்குப் போய்விடும்; கடனுக்கு வெட்டியதுபோக மீதியாக சொற்ப தொகைதான் கையில் கிடைக்கும். உதாரணமாக 30,000/= சம்பளத்தில், 15000/= கடனுக்குப் போனால் மீதி 15000/= தான் கையில் கிடைக்கும். பிரித்துப்பார்த்தால், நாளொன்றுக்கு 500/=வே கிடைக்கிறது.
இதனால் அரச ஊழியர்களுக்கு கடமையில் சலிப்பு ஏற்படுகிறது. ஒரு கூலித்தொழிலாளி நாளொன்றுக்கு 1500/= உழைக்கிறான். நான் காலை 8 .00 – 8.30மணிக்கு வேலைக்குப் போய் 4.15 – 4.45 மணி வரை வேலை செய்தும் நாளொன்றுக்கு 500/= தானே கிடைக்கிறது . என்ற எண்ணம் உண்டாகிறது . இது கடமையில் விருப்பமின்மை, சலிப்பு ஏற்படக் காரணமாகிறது,. எனவே சம்பளத்தைப் பிணையாக வைத்துக் கடன் பெறுவதை அரச ஊழியர்கள் பெருமளவு தவிர்த்துக் கொள்ளுங்கள்!” இவ்வாறு 2002ம் ஆண்டு வவுனியா மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய காலத்தில் கூறியவர் கௌரவ நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள்.
தாபன விதிக் கோவை, நிதிப் பிரமாணங்களில் கடன் விகிதங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் அரச ஊழியர்கள் அதிகமதிகமாக அரச, தனியார் வங்கிகளில் கடன்களைப் பெற்று அதனால் நீண்டகாலம் சம்பளத்தைக் குறைவாகப் பெறுவதை அவதானிக்கும் பொழுது அன்று ஐயா கூறியது நினைவில் வந்தது. பகிர்ந்தேன்.
அன்புடன் … N.K.Kajarooban