பிருத்தானியாவில் ஈழத்தமிழ் யுவதி சுஜானா அழகுராணி போட்டியில்!!
பிரித்தானியாவில் இங்கிலாந்து அழகுராணிப் போட்டியின் இறுதி போட்டியாளர் பட்டியலில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட சுஜானா ஜெயரத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வருடத்துக்கான மிஸ்கொவென்றி பட்டத்தை ஏற்கனவே வென்ற சுஜானா தற்போது இங்கிலாந்து அழகுராணிப் போட்டியில் பங்கெடுக்கும் ஏனைய வேட்பாளர்களுடன் இணைந்துள்ளார்.
இவர் உயிரியல் மருத்துவத்துறை பட்டப்படிப்பு மாணவி ஆவார்.
இவர் தனக்கு கிட்டியவாய்ப்பு குறித்து ஐபிசி தமிழுக்கு கருத்துக்களை பகிர்ந்திருந்த போது, இந்தச் சந்தர்ப்பம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக கூறுகிறார்.
அழகுராணிப் போட்டியில் தனது வெற்றியை உறுதி செய்ய அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் கூறியுள்ளார்.

