புதினங்களின் சங்கமம்

நல்லுார் கந்தனுக்கு நடந்த கதி!! திருவிழாவின் போது வெளிவீதி உலா இல்லை!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய
கற்பூரத் திருவிழாவில் இன்று மாலை திருக்கல்யாண உற்சவத்தை அடுத்து கந்தன்
வெளி வீதியுலா வரும் காட்சி நிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

நல்லூர் கற்பூரத் திருவிழாவில் இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக
உற்சவத்தினைத்  தொடர்ந்து  பிற்பகல் அழகே உருவான முருகப்
பெருமானுக்கும், அவனது இச்சா சக்தி, கிரியா சக்திகளாக விளங்கும்
வள்ளியம்மை,தெய்வயானை நாயகியருக்கும் ஆலய வசந்தமண்டபத்தில் திருக்கல்யாண
வைபவம் இடம்பெறும் .

அதனைத் தொடர்ந்து அலங்காரக் கந்தன் திருமணக் கோலத்தில் எழுந்தருளி  வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்குவார்.

எனினும் இன்று மாலை நிகழ்வு  நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

தற்போழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் ஆலயத்தின்
மீதான பாதுகாப்பு காரணமாகவும் சுவாமி வெளி வீதியுலா நிறுத்தப்
தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .