புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக மாணவிக்கு 17 வயது மாணவன் செய்த கொடூரம்!! இருவரும் வைத்தியசாலையில் அனுமதி!!

சாரதி அனுமதிப்பத்திரமின்றி வேகமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற 17 வயது இளைஞன் மோதித்தள்ளியதில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று இரவு பரமேஸ்வரா சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் 3ஆம் வருடத்தில் கல்வி பயிலும் திருகோணமலையை சேர்ந்த மாணவியொருவரே படுகாயமடைந்தார்.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி மிக வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 17 வயது இளைஞன் கட்டுப்படுத்த முடியாமல் மாணவியை மோதித்தள்ளினார்.

மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞனும் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.