புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இரு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை(13) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தாண்டிக்குளத்தில், புகையிரதக் கடவை இல்லாத இடத்தில் சடலம் மீட்கப்பட்டது.

இன்று அதிகாலை கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் பயணித்த புகையிரதத்தில் அவர் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. .

வவுனியா ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மைக்கல் தினகரன் என்பவரே பலியாகியுள்ளார்.

அவரது மோட்டார் சைக்கிள் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் மதுபானப் போத்தல் காணப்படுகிறது.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது மது அருந்திய பின் விபத்தில் சிக்கினாரா அல்லது ஏதேனும் குற்றச்செயல்கள் இடம்பெற்றதா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.