கதிரியக்க அறைக்குள் சிறுமியை மட்டும் அழைத்து பாலியல் துஷ்பிரயோகம்!! வைத்தியர் பிணையில்!!
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வைத்தியரை 300,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 14ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மருத்துவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் விசாரணையின் போது வைத்தியர் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
இந்த வைத்தியர் கராப்பிட்டிய வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் பணியாற்றுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் இம்மாதம் 8ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயாருடன் சிறுமி சிகிச்சைக்கு சென்றிருந்தார். கதிரியக்க அறைக்குள் சிறுமியை மட்டும் அழைத்து சென்றதாகவும், அப்போது சிறுமி துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
