புதினங்களின் சங்கமம்

சஜித் அணி அலுவலகத்தினுள் 38 வயதான பெண் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலமாக மீட்பு!

கேகாலை, களுகல்ல மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தினுள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலத்திற்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் சகுந்தலா வீரசிங்க என்ற 38 வயதுடையவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அலுவலகத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் அவர், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.