புதினங்களின் சங்கமம்

தென்மராட்சி – சாவகச்சேரி பகுதியில் கிளைமோர் குண்டுகள் மீட்பு!!

தென்மராட்சி – சாவகச்சேரி பிரதேசத்தில் இரு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த இரு கிளைமோர் குண்டுகளும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கும் பொருளாதார மத்திய நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியில் இருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பழைய இரும்பு சேகரிக்கும் வியாபாரி ஒருவர் இதனை கண்டு வழங்கிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.இதையடுத்து குறித்த கிளைமோர் குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.