வெள்ளவத்தையில் தமிழ் குடும்ப பெண்கள் அனைவரையும் தன் வசமாக்கி வைத்திருக்கும் ஒரு ஆண்மகன்!!
ஒரு பிரபல தனியார் வங்கி அருகில் ஒரு இளம் தம்பி பழங்கள் விற்றுவருகிறார்.
எனக்கு மாலையில் ஒரு 1/2 மணிநேரம் அந்த பாதையால் நடந்து போய் வருவது பிடித்தமான பொழுதுபோக்கு ( window shopping) ஒரே காரணம் அரசமரக்காற்று , பாதை நல்ல நிழலாக இருபுறம் முழுவதும் தொடர்மாடிகளாக இருந்தாலும் ஊர்மனை போல ஓர் உணர்வு அந்த பாதையில் நடந்து போய் வரும் போது குறைந்தது 2/3 பேராவது அறிந்தவர்கள் வருவார்கள் hello சொல்லி 1 நிமிடம் சுகம் விசாரித்தாவது கதைத்துக்கொள்வோம்.
இத்தனை வருடங்களில் அந்த பாதையில் பழங்களோ மரக்கறிகளோ நான் முன்னர் வாங்க மாட்டேன், வெளியாட்டு காசில் கொழுப்பு பிடித்த எம்மவர் வாங்கும் இடமென மனதில் பதிந்து விட்டிருந்தது.
ஆனால் lockdown ல் வீட்டிற்கு பழங்கள் மரக்கறிகள் வரும் போது எனது தொடர்மாடியில் உள்ள அம்மா பழங்கள் வாங்கிக்கொண்டு இருந்தார் எட்டிப்பார்த்தேன் “இந்த பெடியன்ட வாங்குங்க நல்ல பெடியன்” எண்டார்,
இலங்கையிலையே சிறந்தபழங்கள் தரமான பழங்கள், தரமான விலை என்றார்.
Lockdown வேறு வழியில்லாமல் வாங்கினேன். உண்மையில் நல்லபழங்கள். ( மயக்கிட்டான்
)
துலைஞ்ச முதல் 
நானோ பழங்கள் பிரியை window shopping , fruits purchasing ஆனது 

Point is :- தரமான பழங்கள் கறுத்தகொழும்பான் 1 kg 1000 வித்தாலும் வாக்கிறது ஒரு பழம் 300 வித்தாலும் வாங்கிறது , இன்னுமொரு மஞ்சள் மாம்பழம் கல்லுபோல பேர் மறந்திட்டன் ஒரு பழம் 650 / 700 விற்றாலும் வாங்கிறது. மயங்கியாச்சு 
வியாபார தந்திரமா / நேர்மையா ?
பல குடும்ப பெண்கள் அந்த தம்பியிடம் தான் வாங்குவதை அவதானித்தேன், என்னோடு எப்பிடி பேசுகிறாரோ அதே போல் தான் அனைவரோடும் பேசுவதையும் அவதானித்தேன். அந்தப்பெடியன் அப்பிடி என்ன மயக்கிட்டான் எல்லோரையும்?
மெடம் 1 kg 850 உங்களுக்காக 800 என்று எல்லோரிடமும் ஒரே போல் ரகசிமாக சொல்லுறான் 

என்று நானும் “ ஓம் ஓம் நல்ல பிள்ளை “
என்றேன்
உடனே lockdown ல் நானே சொன்னது ஞாபகம் வந்தது
எப்படி
என்று 
Abi Thushy Facebook Post
