புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலையில் “ராக்கிங்“ செய்த மாணவக் காவாலி ”மானம்” போய் விட்டதாக கூறி தற் கொலை நடிப்பு!!

யாழ் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை ராக்கிங் என்ற போர்வையில் தெல்லிப்பளையில் உள்ள வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியான செயற்பாடுகளை மேற்கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவக் காவாலிகள் சிலருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். குறித்த  மாணவக் காவாலிகள் தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தனது விரிவுரை வகுப்பில் பெயர் விபரங்களை குறிப்பிட்டு கதைத்ததால் தனக்கு மானம் போய் விட்டதாக கூறி காவாலிகளில் ஒருவர் போலியான தற்கொலை செய்ய முயற்சித்து தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.  இவரது விடயம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவும் கவனம் செலுத்தியுள்ளதாம். உலகமகா நடிப்புடா சாமியோ….