புதினங்களின் சங்கமம்

யாழ்.குடாநாட்டில் மேலும் 12 பேருக்கு, புதுக்குடியிருப்பில் மேலும் ஒருவருக்கு கொரோனா!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 676 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. குறித்த முடிவுகளை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

விபரம் வருமாறு.

* இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 676 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

* யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேருக்கும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடுவில் – 8 ( ஒருவரை தவிர ஏழு பேரும் தொற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் )

சண்டிலிப்பாய் – 3 (தொற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் )

தெல்லிப்பழை – 1 தொற்றாளருடன் தொடர்புகொண்டிருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர் )

புதுக்குடியிருப்பு – 1 ( ஏற்கனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்)

தம்பகொலபட்டின தனிமைப்படுத்தல் நிலையம் -1

* பரிசோதனைக்கு உட்பட்ட ஏனையவர்களுக்கு தொற்று இல்லை.