புதினங்களின் சங்கமம்

பெண் பொலிஸாரை புரட்டி எடுத்த சிங்கள பெண் சட்டத்தரணி! இலங்கை உயர்நீதிமன்றில் நடந்த சம்பவம் என்ன?

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த பெண் சட்டத்தரணி புதுக்கடை உயர் நீதிமன்ற தொகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21ஆம் திகதி ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களையும், கொழும்பிலுள்ள மூன்று, நட்சத்திர ஹோட்டல்கள் இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் 250க்கும் அதிகமான அப்பாவி மக்கள் பலியானதுடன், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

அதேவேளை சிறிலங்காவில் இன்றும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் நீடித்துவருவதுடன், பெரும்பாலான இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொழும்பு மேல்நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும் போது பெண் சட்டத்தரணி ஒருவர் அவரை சோதனைக்கு உட்படுத்திய பெண் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு குறித்த சட்டத்தரணி வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் இன்றைய தினம் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.