மீன்பிடி அமைச்சரின் மறுபக்கம் இதுவா?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்……
தமிழர் என்பதால் இவருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டதாக சிலர் நினைக்கின்றனர்.
அது தவறு. அவர் ஜேவிபியில் நீண்ட காலமாக இருந்து வருகின்றார்.
1989ல் இவரை படையினர் தேடியபோது வவுனியாவில் ஒரு தமிழ் போராளிக்குழுவின் பாதுகாப்பில் சில மாதங்கள் இருந்திருக்கிறார்.
ஜேவிபி சார்பில் மாகாணசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தமிழ்நாடு சென்று அகதிமுகாம்களை பார்வையிட்டிருக்கிறார்.
இந்தியாவில் பிறந்த அகதிக் குழந்தைகள் இலங்கை பிறப்பு சான்றிதழ் பெற உதவியிருக்கிறார்.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு பற்றி தெளிவான பார்வை கொண்டவர்.
நான் எழுதிய “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூலை வரவேற்றவர்.
அதனை சிங்களத்தில் வெளியிட வேண்டும் என்றுகூறி அதன் சிங்கள மொழி பெயர்ப்பையும் செய்து தந்தவர்.
அவரும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவும் எனது நூலைப் பெற்று பலருக்கு வழங்கியவர்கள்.
தமிழ்நாட்டில் இருந்த ஒரு பெண் உட்பட நான்கு அகதிகள் படகு மூலம் இலங்கை வர முயன்று கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது.
தமிழ்நாட்டில் வாழ முடியாமல் இலங்கை திரும்ப விரும்புபவர்களை கைது செய்தது மட்டுமன்றி அவர்களை சிறப்புமுகாமில் அடைப்பது கொடுமை.
ஜனாதிபதி அனுரா அடுத்த வாரம் இந்தியா செல்லவுள்ளார். அமைச்சர் சந்திரசேகர் இந்திய தூதுவரை சந்திக்க இருக்கிறார்.
எனவே மீனவர் பிரச்சனை, அகதிகள் பிரச்சனை என்பவற்றுக்கு இவர்கள் இச் சந்திப்புகளில் தீர்வு காண வேண்டும்.
தோழர் பாலன்

