புதினங்களின் சங்கமம்

வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழப்பு!

வெள்ளவத்தை விவேகானந்தா வீதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இன்று காலை தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பெயின்டராக பணியாற்றி வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.