முல்லைத்தீவு யுவதியைக் காணவில்லை!! தேடி அலையும் பெற்றோர்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் இளம் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 வயதுடைய குறித்த யுவதி வீட்டில் இருந்து காணாமல் போன போது சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார்.
சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 முதல் காணாமல் போன நிலையில் பொலிஸ் முறைப்பாடு செய்தும் இதுவரை யுவதியை காணவில்லை என கூறப்படுகிறது.
எனவே யுவதியை கண்டவர்கள் 0760777615, 0740961230 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

