Home புதினங்களின் சங்கமம் தமிழ் பெண் ஒருவரை உயர் பதவியில் அமர்த்திய ரணில்!

தமிழ் பெண் ஒருவரை உயர் பதவியில் அமர்த்திய ரணில்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான திருமதி. மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார்.

15 வருட கால தனது ஊடக வாழ்வில் சிறந்த ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் திறம்படக் கடமையாற்றியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக திருமதி. மேனகா மூக்காண்டி நியமனம் பெறுவதற்கு முன்னர் கொழும்பு பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.