பிரதமர் ரணிலின் அலுவலக கதவை உடைக்க முற்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!! கொழும்பு வானில் பறக்கும் தாக்குதல் ஹெலிகள்….. பரபரப்பு காட்சிகள் இதோ…
கொழும்பில் ஒருவகையான பதற்றமான நிலைமையொன்றே ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்துவருகின்றனர். அங்கு கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு வானில், மிகவும் தாழ்வாக ஹெலிகள் வட்டமிட்டு பறந்துகொண்டிருக்கின்றன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் போராட்டக்கார்களால் முற்றுகையிடப்பட்ட நிலையில் போராட்டக்கார்கள் மதில்களில் ஏறி உள்ளே நுழைந்துவருகின்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.
பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டக்கார்களை இலக்குவைத்து கண்ணீர்ப்புகைப் பிரயோகம் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டது.
இருந்தபோதிலும் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
