பாடை கட்டி பறை அடித்து தென்னிந்தியப் பாடகர் மீது முட்டை வீச்சு!! கனடா தமிழர்களின் திருவிளையாடல் வீடியோ!!
கனடாவின் ரொரண்டொ நகரில் நடந்த தமிழர் தெருவிழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நிகழ்வில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் மீது சில பொருட்கள் வீசப்பட்டுள்ளன.கனடாவில் நடத்தப்படும் தமிழர் தெருவிழா நிகழ்ச்சி ஏற்பாட்டு அமைப்பான கனடிய தமிழ் காங்கிரசுக்கும், பிறிதொரு அமைப்புக்குமிடையிலான முரண்பாடே இந்த குழுப்பத்தின் காரணம்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்பை பேணுவதாக குற்றம்சாட்டிய எதிர்ப்பாளர்கள், புலிக்கொடிகளையும் ஏந்தியபடி நிகழ்விடத்துக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இசை நிகழ்ச்சி நடந்த போது, மேடையில் பாடிக்கொண்டிருந்த தென்னிந்திய பிரபல திரைப்பட பாடகர் ஸ்ரீநிவாஸ் மீது சில பொருட்கள் வீசப்பட்டது.இதையடுத்து இசை நிகழ்ச்சி இடைநடுவில் நிறுத்தப்பட்டது.
கனடிய தமிழ் காங்கிரசின் பாடை கட்டப்பட்டு பறை அடிக்கப்பட்டு, இறுதிச்சடங்கு செய்வதை போல எதிர்ப்பாளர்கள் பாவனை செய்தனர்.