Vampan memesபுதினங்களின் சங்கமம்

எரிபொருள் படிவம் என ஒன்லைனில் வெளியாகிய படிவம் அங்கஜனின் திருவிளையாடலா?

யாழ்பாண மக்களே எரிபொருள் பெற ஒன்லைனில் பதியுங்கள் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் அனுப்பிய ”கூகிள் லிங்“ படிவம் மக்களின் தகவல்களைப் பெறுவற்காக அங்கஜனின் திட்டமிட்ட நடவடிக்கையா? என சமூகவலைத்தளங்களில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு என கூறி யாழ் செயலகம் சேகரித்து வைத்திருந்த “டேட்டாக்களை “ அங்கஜனால் நியமிக்கப்பட்டிருந்த அரசஅதிபர் மகேசன் மற்றும் மேலதிக அரச அதிபர் பிரதீபன் ஆகியோர் அங்கஜனிடம் கொடுத்து அதை வைத்து பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அந்த இளைஞர் யுவதிகளை தொடர்பு கொண்டு தானே வேலை வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதாக பெரும் குற்றச்சாட்டுக்கள் வேலைவாய்பு பெற காந்திருந்து ஏமாந்தவர்களால் சுமத்தப்பட்டுள்ளது. அதே போல் எரி பொருள் ஒன்லைன் படிவம் என கூறி அனுப்பபட்ட படிவத்தனின் டேட்டாக்களையும் அங்கஜனிடம் ஒப்படைப்பதற்காக கச்சேரி முயல்கின்றது.

சிமாட் போன் இல்லாத ஏழைகள், கிராமப் புறங்களில் உள்ள மக்கள் இதனை எவ்வாறு நிரப்புவர்? கணனி அறிவில்லாதவர்கள் இதனை எங்கு கொண்டு சென்று நிரப்புவர்?? முட்டாள்களின் கைகளில் யாழ்ப்பாணம் சிக்கியுள்ளதா? அரசஅதிபர் மகேசனும் மேலதிக அரச அதிபர் பிரதீபனும் என்ன புடுங்குகின்றார்குள் என சமூகவலைத்தளங்களில் பெரும் ஆவேசங்களுடன் கூடிய கருத்துக்கள் பரவி வருகின்றன.

பில்டப் பண்ணுறமோ….. பீலா விடுறமோ… ஆனால் இந்த உலகம் நம்மை உத்துப் பாக்கனும் என்ற கொள்கையில் இருந்து யாழ்ப்பாணத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அங்கஜன் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் சுமந்திரன் மோட்டச்சயிக்கிளில் திரிஞ்சாலும் டக்ளஸ் எம்.ஜி.ஆர் போன்ற கெட்டப்பில் திரிஞ்சாலும் யாழ்ப்பாணத்து சொங்கிகளை அங்கஜன் கவர்ந்தது போல் யாரும் கவரவில்லை என்பது வெளிப்படை உண்மை எனவும் சிலர் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்துள்ளார்கள்.