புதினங்களின் சங்கமம்

22 மாணவர்களுடன் உறவு !! சிறுமியை அச்சுறுத்திய சட்ட வைத்திய அதிகாரி கைது!!

மொனராகலை – தனமல்வில மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியர், கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியை குற்றவியல் வற்புறுத்தல் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினரால் நேற்றையதினம் (17-08-2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சட்ட வைத்தியர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 300,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 21 பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலிலும் சிறுவர் நன்னடத்தை பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தை மூடி மறைத்த குற்றச்சாட்டில் சிறுமி படித்த பாடசாலையின் அதிபர் உட்பட 4 ஆசிரியர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.