சித்திரா 3 ஆண்களுடன் அந்தரங்கம்!! குடிப்பழக்கமும் இருந்ததாம்!! ஹேமந்த்தின் தந்தை கூறுகின்றார்!!

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29).

இவர் கடந்த 9-ம் திகதி அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் கடந்த 8-ம் திகதி (செவ்வாய்கிழமை) படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ள நிலையில் ,சித்ரா அறையிலுள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கடந்த வியாழக்கிழமை சிறைக்கு சென்று தன் மகனை சந்தித்த ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், விசாரணையின் போக்கில் தனக்கு திருப்தி இல்லை என்றும் அதே சமயம் சித்ராவின் இந்த முடிவுக்கு அவருக்கு இருந்த கடன் பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம் என்கிற புதிய தகவலை கூறியதுடன், சமூக வலைதளங்களின் மூலமாக தனக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளதாக சில பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை ரவிச்சந்திரன் கொடுத்துள்ளார் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகார் மனுவில் ஏற்கனவே மூவரை சித்ரா காதலித்ததாகவும், அதில் ஒருவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றதாகவும், மதுப்பழக்கம் இருந்த சித்ராவை, அவருடன் நெருக்கமாக இருந்ததாக புகைப்படம் எடுத்து ஒருவர் மிரட்டி வந்ததாகவும், குறிப்பிட்ட சில எண்களில் இருந்து அழைப்பு வந்தால் மட்டும் பதட்டத்துடன் சித்ரா தனியாக சென்று பேசுவார், பின்னர் அந்த எண்களை அழித்துவிடுவார் என்றும் முக்கிய அரசியல்வாதிகளுடன் மணிக்கணக்கில் சித்ரா பேசியதாகவும், சித்ராவின் திருமணத்தை தடுக்க சிலர் ஆதாரங்களுடன் காத்திருந்ததாகவும் ரவிச்சந்திரன் புகார் மனுவில் அடுத்தடுத்து குறிப்பிட்டுள்ளார்.

சித்ராவுக்கு இருந்த மார்க்கெட், அவருக்கு திருமணம் நடந்தால் சரிந்துவிடும் என்பதால், முதலீட்டாளர்களால் சிலரால் இந்த சிக்கல்கள் எழுந்ததாகவும் அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை நடத்தி தன் மகனை விடுவிக்க வேண்டும் என்று ஹேமந்த்தின் தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)