யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் பெற்றோலை மிச்சப்படுத்த உதவிய திருடன்!!
கந்தர் மடத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் வீட்டில் சேர்ந்த குப்பைகளை குப்பை கொட்டும் இடத்தில் கொண்டுபோய் போடுவதற்காக மூட்டை கட்டி தனது மோட்டச்சைக்கிளில் வைத்து கிளம்பியுள்ளார்.
வீட்டு கேட்டை தாண்டியதும் தான், பூட்டிய வீட்டுக் கதவின் திறப்பை எடுக்க மறந்ததை உணர்ந்திருக்கிறார். மோட்டச் சைக்கிளை கேட்டடியில் விட்டுவிட்டு திறப்பை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தால், யாரோ அவரது குப்பை மூட்டையை திருடிச் சென்றுள்ளனர்.
அப்பாடா பெற்றோல் செலவு மிச்சம் என எண்ணி, குறித்த ஆசிரியர் பெருமூச்சு விட்டுள்ளார்.

