புதினங்களின் சங்கமம்

யாழ்.கல்வி வலயப் பாடசாலைகள் வழமைபோல நடைபெறும் – கல்விப் பணிப்பாளர்!

யாழ்.கல்வி வலயப் பாடசாலைகள் அனைத்தும் தளர்வில்லாமல் வழமைபோல் நடைபெறும் என்று யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்திக்குறிப்பு ஒன்றை அதிபர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாண வலய நகர்புற பாடசாலைகளின் அதிபர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் அவர்களின் ஏகோபித்த முடிவாக கல்விச்செயற்பாட்டில் தளர்வில்லாமல் பாடசாலைகளை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவையான வகுப்புக்களை நேரடியாகவும் ஏனய மாணவர்கள் zoom,teem செயலிமூலமாகவும் கல்விவழங்கவும் அதனை தீர்மானிக்கும் பொறுப்பையும் அதிபர்கள் ஏற்றுள்ளனர்,இதே போன்று ஏனய பாடசாலைகளும் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

1, பாடசாலைகள் மூடப்படாது கல்வி வழங்கப்படவேண்டும்.

2, பிரதான பரீட்சைகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புக்கள் நடாத்தப்படல் வேண்டும்.

3, zoom மூலமான கற்றல் செயற்பாட்டில் ஏனைய மாணவர்களுக்கான இணைக்கப்படவேண்டும்.

4, ஆசிரியர் வருகை நேரம் தொடர்பிலும் தரித்திருந்து கற்பிக்கும் காலம் தொடர்பிலும் தளர்வுப்போக்கை கடைப்பிடிக்கலாம் .

5, இது ஒரு சமூகப்பொறுப்பு என்பதை உணர்ந்து செயற்படல் வேண்டும்.

6, கிராமப்புற பாடசாலைகளின் அருகில் இருந்து நகர்புறப்பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் தற்காலிகமாக அருகேயுள்ள பாடசாலைகளில் சென்று கற்றலில் ஈடுபட அனுமதிக்க முடியும். இதனை அதிபர்கள் செயல்படுத்தலாம்.

7, போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மாற்றாக மாணவர்களை சைக்கிள்களிலும் நடந்தும் பாடசாலைக்கு செல்ல ஊக்குவிக்க முடியும்.

8, எவ்வாறெனினும் ஒவ்வொரு பாடசாலை அதிபர்களும் உங்கள் பாடசாலைகளை நடாத்தும் பொறுப்பை ஏற்று செயற்படுத்துமாறு பணிக்கப்படுகின்றீர்கள்.

9, மாகாண கல்விப்பணிப்பாளரால் இது தொடர்பாக விபரிக்கப்பட்ட இணைக்கப்பட்டுள்ள விடயங்களையும் கவனத்தில் எடுத்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வலய கல்விப்பணிப்பாளர். யாழ்ப்பாண வலயம்.