யாழில் ‘எனது தங்கையின் நிர்வாண போட்டோ உனது போனில் உள்ளது’ என கூறி அலங்கோலம் செய்தவர்களுக்க நடந்த கதி!!
சென்றவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சிசிரிவி கமெராவின் துணையுடன் குறித்த நபர்களின் மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் எமது செய்தியாளருக்கு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
யாழ்ப்பாணம் பிறவுண் வீதிக்கு அண்மித்த பகுதி, தொடருந்துப் பாதைக்கு அண்மையாகச் செல்லும் வெளிநாட்டுப் பிள்ளையார் கோவிலடி, நல்லூரின் செட்டித் தெருச் சந்திக்கு அண்மித்த பகுதிகளில் மிக நீண்ட நாட்களாக வழிப்பறிக் கொள்ளைகள் நடைபெற்றுவருகின்றன.
வீதியில் செல்லும் இளைஞர்களை வழிமறித்து, அவர்களிடம் தமது (திருடர்கள்) சகோதரிகளின் ஒளிப்படங்கள் தொலைபேசியில் உள்ளதாக மிரட்டி அவற்றைப்பார்க்கத் தருமாறு பெற்றுக்கொண்டு தப்பி ஓடுவது,
தனியாகச் செல்லும் இளம் பெண்களை வழிமறித்து அவர்களுடைய தொலைபேசிகளைப் பறித்துக்கொண்டு ஓடுவது, பணம் பறித்துச் செல்வது என்று தொடர்ந்தும் இவ்வாறான வழிப்பறிச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது ஒரு கைதுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

