புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்ஸில் வாழும் யாழ்ப்பாண குடும்பஸ்தர் சிங்களப் பொலிசுக்காரியுடன் கள்ளத் தொடர்பா?? மனைவி இலங்கைக்கு ஓடி வந்துள்ளார்!!

யாழில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றி, தற்போது வெளிமாவட்டத்தில் கடமையாற்றும் சிங்களப் பெண் பொலிஸ் ஒருத்தியுடன், பிரான்சில் நிரந்தரமாக வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 39 வயதான குடும்பஸ்தர் கள்ளத் தொடர்பில் உள்ளார் என மனைவி கடும் சந்தேகத்தில் இலங்கை நோக்கி விரைந்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்தில் குறித்த குடும்பஸ்தர் 3 தடவை இலங்கைக்கு வந்துள்ளாராம்.

பிரான்சில் சிறிய கடை ஒன்றை வைத்திருக்கும் குறித்த குடும்பஸ்தர் பல ஆண்டுகள் கொழும்பில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்துவிட்டு 2006ம் ஆண்டு பிரான்ஸ் சென்றுள்ளார். 2011ம் ஆண்டு யாழைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் முடித்து பிரான்சில் சிறுகடை ஒன்றை நடாத்தி வந்துள்ளார் குறித்த நபர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் யாழ் வந்த குறித்த நபர் நண்பர்களுடன் தண்ணியடித்துவிட்டு அயல் வீட்டுக்காரருடன் சண்டையிட்டமை தொடர்பாக நண்பர்களுடன் சேர்ந்து பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ்காவலில் வைக்கப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் இந்த வழக்கு சம்மந்தமாக பல தடவைகள் குறித்த பொலிஸ் நிலையத்திற்கு சென்று வந்த போதே அங்கு சிறுகுற்றத்தடுப்பு பிரிவில் கடடைமயாற்றிய பெண் பொலிசாரின் தொடர்பு ஏற்பட்டதாக மனைவி மூலம் தெரியவந்துள்ளது.

வழக்கு ஓராண்டுவரை இழுபட்டு பின்னர் இணக்கசபையில் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரும் பிரான்ஸ் வந்தும் குறித்த சிங்கள பெண் பொலிசுடன் கணவர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். மனைவிக்கு கணவன் குறித்த பெண் பொலிசுடன் கதைப்பது தெரிந்திருந்தாலும் அது சாதாரண நட்பு என்றே எண்ணியிருந்துள்ளாராம். மனைவிக்கு முன்னாலேயே குறித்த பெண் பொலிசுடன் கணவர் கதைப்பதும் தனது பிள்ளைகளை தொலைபேசியில் காட்டுவதும் வழமையாக கணவர் மேற்கொண்டுள்ளார். இதனால் மனைவிக்கு சந்தேகம் வரவில்லை. இதன் பின்னர் கணவர் தொடர்ச்சியாக வெவ்வேறு காரணங்களைக் காட்டி இலங்கை சென்றுள்ளார். தனது நண்பன் இறந்துவிட்டதாக பொய் கூறி ஒருதடவை கணவன் இலங்கை சென்று மனைவியிடம் மாட்டியுள்ளார். அதன் பின்னரே கணவனை மனைவி துப்பறிய தொடங்கியதாகத் தெரியவருகின்றது. ஏழைகளுக்கு உதவுவதாக கூறி மாதந்தோறும் 200 யூரேக்களை கணவன் இலங்கைக்கு அனுப்பி வந்துள்ளார். இதனை மோப்பம் பிடித்து யாருக்கு அனுப்ப்படுகின்றது என மனைவி அறிந்த போது அது தொடர்ச்சியாக சிங்கள பெண் ஒருவரின் கணக்குக்கு அனுப்பட்டுள்ளது. இதன் பின்னரே வீட்டில் பூகம்பம் வெடித்ததாகத் தெரியவருகின்றது.

கணவனின் மொபைல் போனின் பாஸ்வேட்டை மிக நுட்பமாக அறிந்து குறித்த போனை கணவர் நித்திரைக்கு சென்ற பின் ஆராய்ந்த மனைவி அதில் வழமையாகக் கதைக்கும் சிங்கள யுவதியின் அஜால் குஜால் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதை அறிந்து கடும் சண்டையிட்டதாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் கணவன் தனது மனைவியிடம் இலங்கை போவதாக கூறாது இலங்கை வந்த பின்னரே அது தொடர்பாக மனைவிக்கு அறிவித்துள்ளார். இதனால் கடும் கோபம் கொண்ட மனைவியும் தற்போது இலங்கைக்கு பாய்ந்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

கணவனின் நடவடிக்கை தொடர்பாக மனைவி குறித்த பெண் பொலிஸ் கடமையாற்றும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட ஆயத்தமாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலதிக தகவல்கள் வரும் போது அதனை நாம் இங்கு வெளிப்படுத்துவோம்.