புதினங்களின் சங்கமம்

யாழில் பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணின் சங்கிலி திருடர்களால் அறுப்பு!!

பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணின் சங்கிலி திருடர்களால் அறுத்துச்செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கொடிகாமம் காவல் பிரிவுக்குட்பட்ட டச்சு வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

தனது பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு உந்துருளியில் வேம்பிராய் பகுதியினூடாக வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே சங்கிலி அறுக்கப்படுள்ளது.