புதினங்களின் சங்கமம்

எரிவாயு பிரச்சனைக்கு யாழில் புதிய கண்டு பிடிப்பு!! கிளிநொச்சி ஏழை விவசாயியின் அற்புத கண்டுபிடிப்பு!! (Video)

எரிவாயு தட்டுப்பாடு நிலவும் தற்போதைய காலத்தில் தனது வீட்டுக்கு தேவையான எரிவாயுவினை இயற்கையாக உற்பத்தி செய்து அசத்தும் கிளிநொச்சி மாவட்ட இயற்கை விவசாயி. நாங்களாகவே சுயமாக எரிவாயு தயாரிக்கலாம். இந்த கிளிநொச்சி விவசாயி இவ்வாறான இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்துள்ளார். இது பொருட்செலவு பணச் செலவு குறைவான முறையில் தயாரித்துள்ளார். இதை அப்படியே பார்த்து பிரதி செய்து பெறரும் விளம்பரம் செய்து தாங்கள் விஞ்ஞானிகள் என்ற பீலா விட்டு, தங்களை கண்டுபிடிப்பாளர்கள், உற்பத்தியாளர்கள் என வேடம் போட்டு யாழ்ப்பாண மக்களின் தலையில் மிளகாய் அரைத்து பணத்தை புடுங்க பல வல்லூறுகள் திரிவார்கள் … அவதனம்..

இவரிடம் குறித்த எரிவாயு தயாரிப்பதற்கு தேவைப்படும் பொருட்களையும் அதனை செய்வதற்கான கூலியாக 3 ஆயிரம் ரூபாக்களையும் கொடுத்தால் உங்கள் வீட்டிலும் இயற்கை எரிவாயு தயார்.இந்த ஏழையின் முயற்சிக்கு ஊக்கமளியுங்கள். இவ்வாறான எரிவாயு தயாரிக்க பொருட்கள் மற்றும் அனைத்துக்குமாக ஏற்படும் முழுமையான செலவு 18 ஆயிரம் மட்டுமே.

நீங்கள் பாரிய கொள்ளளவில் எரிவாயுவை தயாரிக்கப் போகின்றீர்கள் என்றால் ஆயிரம் லீற்றர் தண்ணீர்த் தாங்கி அல்லது அதனை விட கூடிய அளவு செய்வதாயின் அதே அளவான தண்ணீர் தாங்கி மற்றும் அதற்கான பொருட்களை வாங்கிக் கொடுங்கள். மிகவும் சிறப்பான முறையில் செய்து கொடுக்கப்படும். மேலதிக தொடர்புகளுக்கு 0742366432