புதினங்களின் சங்கமம்

யாழில் பாடசாலை அதிபர் விபத்தில் பலி!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை டிப்பர் வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கந்தையா சத்தியசீலன் முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.