புதினங்களின் சங்கமம்

சிங்கள அரசியல்வாதி, குழுவினரால் கர்ப்பிணிப் பெண் கொடூரமாக தாக்கப்பட்டார்!!

அனுராதபுரத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவரை அரசியல்வாதி தலைமையிலான குழுவினர் கொடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கெக்கிராவ பிரதேச சபையின் தலைவர் உட்பட 4 பேரால் கேட்ட சாப்பாடு தாமதமாகியதனால் கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரதேச சபை தலைவர் உட்பட 4 பேர் கெப் வண்டி ஒன்றில் ஹபரண நகரதத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்று ப்ரைட் ரைஸ் வழங்குமாறு கோரியுள்ளனர். எனினும் வழங்க தாமதமாகியதனால் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் 8 மாத கர்ப்பிணி மனைவி மீது கடுமையாக தாக்கி உணவகத்தை சேதப்படுத்தியுள்ளார்.

பிரதேச சபை தலைவர் உட்பட 4 பேர் இந்த சம்பவத்தில் தொடர்புப்பட்டிருப்பதாக ஹபரண பொலிஸாரிடம் அதன் உரிமையாளரான சம்பத் விஜேகுகுமார் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதி மாலை 5 மணிக்கு குறித்த 4 பேரும் ப்ரைட் ரைஸ் வழங்குமாறு கோரியுள்ளனர். எனினும் அங்கு இல்லாமையினால் தயாரித்து வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய பணத்தை செலுத்திவிட்டு சென்ற தலைவர் அங்கு வராமையினால் 3 மணித்தியாலங்களாக தயாரித்த ப்ரைட் ரைஸை வேறு ஒருவருக்கு உணவக உரிமையாளர் வழங்கியுள்ளார்.

இரவு 8.40 மணியளவில் அதிக குடிபோதையில் வருகைத்தந்த பிரதேச சபை தலைவர், உணவக உரிமையாளரிடம் தான் வழங்கிய ஓடரை கேட்டுள்ளார். தாமதமாகியதனால் அதனை வேறு நபரிடம் வழங்கியதாக உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த பிரதேச சபை தலைவர் உணவகத்தை சேதப்படுத்தி உரிமையாளர் மற்றும் அவரது 8 மாத கர்ப்பிணி மனைவியையும் கொடூரமாக தாக்கியுள்ளார்.