திருகோணமலை பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய இராணுவ சிப்பாய்கள் கைது!
திருகோணமலை – கோமரங்கடவல பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய நிலையில் குழப்பம் விளைவித்த நான்கு இராணுவ சிப்பாய்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நான்கு இராணுவ சிப்பாய்களும் பொது இடத்தில் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் செயற்படுவதாக பொலிஸ்நிலையத்திற்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.
இதனையடுத்து நான்கு இராணுவ சிப்பாய்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் கோமரங்கடவல – கரக்கஹவெவ பகுதியைச் சேர்ந்த 25 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
