யாழ் மல்லாகம் நீதிமன்ற தீர்ப்பையே தட்டிக் கழித்து திரியும் கிளிநொச்சி கில்லாடி!! பலரிடம் லட்சக்கணக்கான ரூபா மோசடி!
கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக மக்சிகோ பதிப்பகம் என்ற அச்சகம் ஒன்றை நடாத்திவரும் தவராசா விஐயரூபள் என்பவன் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பல்வேறு நபர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை பெற்று அவர்களை ஏமாற்றியுள்ளமை தொடர்பாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர் தான் அச்சகம் ஒன்றை நடாத்தவுள்ளதாக புலம்பெயர் தமிழர்களிடம் கூறி அந்த அச்சகத்தால் வரும் லாபத்தை பங்கிட்டு தருவதாக ஏமாற்றியும் பண்ணைகள் அமைத்து லாபம் தருவதாக கூறியும் ஏராளமான பணத்தை சுருட்டியுள்ளான்.
அத்துடன் ஒரே காணி உறுதியை இரண்டு பேருக்கு ஈடுவைத்தும் ஏமாற்றியுள்ளான். இவனது மோசடிகளில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணி ஈடு வைத்தமை தொடர்பாக ஏமாற்றப்பட்டு தனது 50 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தார். குறித்த நபரின் காசு முழுவதையும் விஜயரூபன் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு மல்லாகம் நீதிமன்றத்தால் 2022ம் ஆண்டு வழங்கப்பட்டும் இன்றுவரை விஜயரூபனிடம் குறித்த தீர்ப்பின் பிரதி வழங்கப்படவில்லை என தெரியவருகின்றது. அதற்கு காரணம் விஜயரூபன் தனது இருப்பிடத்தை வெவ்வேறு பகுதிகளில் மாற்றி மாற்றி செல்வதாக தெரியவருகின்றது. இவ்வாறு இவனால் பாதிக்கப்பட்ட பலரும் பெரும் விரக்தியில் உள்ளதாகத் தெரியவருகின்றது. நீதிமன்றத் தீர்ப்பையே திட்டமிட்டு புறக்கணித்து நீதிமன்றத்தை அவமதித்தும் பெருமளவு பணத்தை சுருட்டியும் சொகுசாக வாழும் விஜயரூபனின் இருப்பிடத்தை நீதிமன்ற பிஸ்கால் இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லையா? அவனை எதற்காக கைது செய்யாது உள்ளார்கள். அவனது அச்சகம் வெளிப்படையாகவே இயங்கி வரும் நிலையில் நீதிமன்றத்தால் தீர்ப்பு பிரதி அவனிடம் வழங்கப்படாது இருப்பது பல்வேறு சந்தேகங்களை உண்டு பண்ணுகின்றது. இவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்டவர்கள் மேற்கொண்டு இவனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவனால் ஏமாற்றப்பட்டவர்களின் விபரங்கள் இதோ
லண்டனில் வசிக்கும் ஒருவர் கனகராஜன்குளப் பகுதியில் இவனை தனது பண்ணையில் வேலைக்கு அமர்த்திய போது அவர் அங்க வளர்த்த மாடுகளை விற்று விட்டு தலைமறைவாகியுள்ளான்.
அதே கனகராஜன் குளப்பகுதியில் அச்சகம் ஒன்று ஆரம்பிக்க போகின்றேன் என கூறி நோர்வேயில் உள்ள ஒருவரை ஏமாற்றி 7 லட்சம் ரூபா வாங்கிவிட்டு தலைமறைவாகியுள்ளான்.
தெல்லிப்பளையைச் சேர்ந்த ஒருவரிடம் கிளிநொச்சியில் அச்சகம் தொடங்கப் போகின்றேன் என கூறி 50 லட்சம் ரூபா ஏமாற்றியுள்ளான். தற்போது அந்தப் பணத்தை உடனடியாக கொடுக்கமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் இன்னும் பணம் கொடுக்கப்படவில்லை.
யாழ் நாவலர் வீதியைச் சேர்ந்த அச்சகம் ஒன்றை நடாத்துபவரிடம் 4 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு அதையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
தெல்லிப்பளைப் பகுதியசை் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்திடம் 4 லட்சம் ரூபா பணம் பெற்றுக் கொண்டு அதையும் திரும்பக் கொடுக்காது ஏமாற்றி வருகின்றான்.
கிளிநொச்சியில் இவன் வைத்துள்ள குறித்த அச்சகத்தில் இவனைத் தேடிச் செல்லும் பணம் கொடுத்தவர்களை இவன் கொலை அச்சுறுத்தல் கொடுத்து வெருட்டி வருவதாகவும் தெரியவருகின்றது.



