இளம் மனைவியின் பிறப்பு உறுப்புக்குள் மதுப் போத்தல்களை சொருகி மகிழ்ந்த நடிகர் யார்?

பிரபல அமெரிக்க நடிகர் ஜொனி டெப்பின் முன்னாள் மனைவி, தனது கணவரின் கொடுமைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க சாட்சியமளித்துள்ளார்.

Pirates of Caribbean திரைப்படத்தின் மூலமாக உலகளவில் ரசிகர்களை பெற்ற அமெரிக்க நடிகர் ஜொனி டெப் (58). இவரின் இரண்டாவது மனைவி ஆம்பேர் ஹெர்ட். இவர்கள் இருவருக்கும் கடந்த 2015 ஆம் வருடம் திருமணம் நடைபெற்ற நிலையில், 2017 ஆம் வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த நிலையில், பிரிவுக்கு பின்னர் ஆம்பர் ஹெர்ட் தான் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டார். மீ ரூவிலும் பதிவிட்டார். ஜொனி டெப்பின் வன்முறைகள் தொடர்பில் பிரபல பத்திரிகைகளிலும் கட்டுரை எழுதினார்.

இதையடுத்து, ஆம்பர் ஹெர்ட் மீது மானநஷ்ட வழக்கு ஜொனி டெப்பினால் தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு கடந்த 12ஆம் திகதி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஆம்பர் ஹெர்ட் அளித்த தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

நடிகர் ஜொனி டெப்புடன் 2 வருடம் குடும்பம் நடத்திய தருணத்தில், அவர் தன்னை பல விஷயங்களில் அடித்து கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

அவரது சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு-

2015ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றபோது மிதமிஞ்சிய மதுபோதையில் இருந்த ஜொனி, தனது மனைவியை இயற்கைக்கு மாறான வகையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், மதுபான போத்தலால் ஆம்பர் ஹெர்ட்டை தாக்கினார். பெண்ணுறுப்பிற்குள் மதுபான போத்தலை செருகி சித்திரவதை செய்தார். இதனால் அவரின் பிறப்புறுப்பு கடுமையான பாதிப்பை சந்தித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜொனி டெப் தனது ரசிகர்கள் மத்தியில் தன்னை நல்லவர் போல அடையாளப்படுத்துகிறார். அவரின் சுயரூபம் இதுதான். வெளியில் மக்களிடையே ஒரு தோற்றம், உள்ளே காம அரக்கன். அவரை திருமணம் செய்யும் வரை நானும் அவரின் மீது நன்மதிப்பை வைத்திருந்தேன். ஆனால், அனைத்தும் பொய்த்துப்போனது என்று தெரிவித்துள்ளார்.

இந்த குற்றசாட்டுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ள ஜானி டீப், அது அனைத்தும் அப்பட்டமான பொய் என தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த குற்றச்சாட்டை ஜொனி டெப் தரப்பு மறுத்துள்ளது. ஆம்பர் சாட்சியமளித்துக் கொண்டிருந்த போது, இல்லை என்பதை போல ஜொனி தலையை அசைத்தபடியிருந்தார்.

ஜொனி டெப்பின் வழக்கறிஞர் வாஸ்குவேஸ், ஆம்பர் ஒரு குழப்பமான பெண் என்றார்.

2009 ஆம் ஆண்டு தி ரம் டைரி படத்தின் செட்டில் அவர்கள் எப்படி முதலில் சந்தித்தார்கள் என்பதை வாஸ்குவேஸ் விவரித்தார். “ஆம்பர், ஜொனியை பின்தொடர்ந்தார். ஜொனியை கவர்ந்தார். அவருடன் நட்பை ஏற்படுத்தி,காதல் வலை விரித்தார். ஜொனி வலையில் விழுந்தார்.

டெப் மற்றும் ஆம்பர் செப்டம்பர் 2015 இல் இத்தாலியின் வெனிஸில் காணப்பட்டனர். அதே ஆண்டு அவுஸ்திரேலியாவில் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஆம்பர்தான் உடல் ரீதியாக வன்முறையில் ஈடுபடுவார். ஜொனி மீது பொருட்களை வீசுவார், அடிப்பார், ஜொனி ஒரு கோழை என்று அவரிடம் கூறுவார். ஜொனி அவருடன் சண்டையிட மாட்டார்.

அவர் தனது மனைவி அம்பரைத் தனது தாயைப் போலவும், சகோதரியைப் போலவும் பார்த்தார்,’ என்று ப்ரெட்ஹாஃப்ட் கூறினார்,

டெப்பும், ஆம்பரும் ஒன்றாகப் பயணம் செய்தபோது – அவரது குழு அவருக்காக ஒரு கூடுதல் அறையை முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது. ஏனெனில், ஆம்பர் கோபமடைந்தபோது அவரிலிருந்து ஜொனி தள்ளியிருக்க வேண்டியிருந்தது” என்றார்.

லழக்கு விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

error

Enjoy this blog? Please spread the word :)