புதினங்களின் சங்கமம்

பொலித்தீன் பைகளில் புத்தகம் கொண்டு வரவேண்டும் என்றது வியாபாரத்துக்காகவா?? அதிர்ச்சித் தகவல்கள்!!

இலங்கையில் வெளிப்படையான பைகளை மாத்திரம் பாடசாலைக்கு எடுத்து வர வேண்டும் என மாணவர்களுக்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கேகாலை மாவட்ட பாடசாலை ஒன்றில் வெளிப்படையான பையில் புத்தகங்களை மாணவர்கள் கொண்டு வரவில்லை என்பது தொடர்பாக எழுந்த பிரச்சினையையடுத்தே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரனை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின்பின்னர் சில பாடசாலைகளின் மாணவர்கள் வெளிப்படையான புத்தகபைகளை பாடசாலைகளுக்கு கொண்டுசெல்கின்றமை தெரிந்ததே.

இதனை அடிப்படையாக வைத்து சில வியாபார நிறுவனங்கள் உடனடியாக பல வெளிப்படை புத்தகப்பைகளை தயாரித்து முன்னின்று விநியோகித்துவருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் கஸ்டத்திலிருக்கும் மாணவர்களை மேலும் கஸ்டத்திற்குள்ளாக்கும் வியாபார வங்குரோத்துத்தனம் என்று பலரும் விமர்சித்துவருகின்றனர்.