Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழில் இளைஞனை அலங்கோலப்படுத்திய ரபிக் பொலிஸ்!! நடந்தது என்ன? (CCTV Video)

நேரமின்மையை சாதகமாக பயன்படுத்தும் காவல்துறையினர்
பெப்ரவரி 4ம் திகதி மதியம் 12:50 தெல்லிப்பளைச்சந்தியில் இருந்து காங்கேசன்துறை நோக்கி நான் சென்றுகொண்டிருந்த வேளை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிசார் எனது மோட்டார் சைக்கிளை மறித்தனர். நானும் நிறுத்தி எல்லா ஆவணங்களையும் காட்டினேன், உடனே அவர் கேட்டார்
?‍♀️-ஏன் நிறுத்தினேன் தெரியுமா?
?‍♂️-தெரியாது.
?‍♀️-அந்த வளைவில் நீங்கள் கோட்டைத்தாண்டி முச்சக்கரவண்டியை முந்தி வந்துள்ளீர்கள்?
?-முச்சக்கரவண்டியை முந்தியது உண்மை தான் ஆனால் நான் வெள்ளையான நேர் கோட்டை தாண்டவில்லை அதற்குள்ளாலேயே முந்தினேன்.
?‍♀️-இல்லை நீங்கள் முந்தினீர்கள்.
?‍♂️-நீங்கள் பொய் சொல்கிறீர்கள் நான் கோட்டைத்தாண்டவில்லை..!!(சற்று கோவத்துடன்?)
இதுவரை நேரமும் நான் தமிழிலும் அவர் கொச்சை தமிழிலும் உரையாடினார்.
?‍♀️-“ஓயாட்ட ஓன்னங் உசாவே கீல கத்தாக்கரண்ணங்”(வேணுமென்றால் நீதிமன்றம் சென்று கதையுங்கள்)என்று கூற அதன் பின் நானும் எனக்கு தெரிந்த சிங்களத்தில்..!!
கோபத்துடனே இந்த மாதிரி உங்களைப்போல் ஒருசிலர் பொய் வேலை செய்யிறதால் தான் உங்கள் சீருடையை கண்டாலே மதிப்பும்,மரியாதையும் வராமல் மாறாக வெறுப்புணர்வு வருகிறது..!!?
அவர் எந்த பேச்சுமில்லாமல் தண்டப்பணம் செலுத்த வேண்டிய துண்டைத் தந்தார்(தடக்கொல)
வந்த ஆத்திரத்துக்கு அதை கசக்கி சட்டைப்பையில் வைத்துவிட்டு மீண்டும் நான் தவறாக முந்திச்சென்ற இடத்தை காட்டும் படி கூற அவரும் காட்டினார்.
நானும் U turn போட்டு அந்த இடத்தை பாரவையிட்டேன். அங்கே Ceypetco எரிபொருள் நிலைய CCTV காமரா அந்த இடத்தை நோக்கி இருந்தது.
உடனே அங்கே சென்று விடயத்தை ்அங்கே இருந்த ஒரு பெண்ணிடம் சொல்ல..!!
அவர் முதலாளி நாளை மாலை வருவார் அவருடன் வந்து சந்தித்து பேசும் படி கூற..
கிட்டத்தட்ட பண்டத்தரிப்பில் இருந்து 4்அல்லது 5 தடவைகள் தெல்லிப்பளை சென்று ஓரு மாதிரியாக CCTV footages கிடைத்தது( இங்கே இணைத்துள்ளேன்) அதை பார்வையிட்ட போது நான் அந்த தவறை இழைக்கவில்லை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டேன்.☺️
அப்படியே காங்கேசன்துறை காவல்நிலையம் சென்று பொறுப்பதிகாரியை சந்திக்க வேண்டும் என்றேன்.அவர் தற்போது இங்கு இல்லை online meeting நடப்பதாகவும் மறுநாள் காலை வருமாறும் தேவைப்பட்டால் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அவருடைய கையடக்க தொலைபேசிக்கு அழைத்து பேசவும் என்றும் பணிவாக ஒரு உத்தியோகத்தர் பதிலளித்தார்.
நானும் அழைப்பையெடுத்து என்னை அறிமுகப்படுத்தி நடந்த விடயத்தை குறிப்பிட்டேன்,
??‍♂️– “எழுதினதன் பின்பு தன்னால் ஒன்றும் செய்ய இயலாது நீங்கள் தவறிழைக்கவில்லையெனில் நீதிமன்றம் செல்லுங்கள்..” என்று அதிகாரத்தொனியில் பதிலளித்தார்..!!
?‍♂️– உங்கள் காவல்நிலையத்தில் உள்ள போக்குவத்து பொலிசார் தான் தவறிழைத்தார் என்பதன் ஆதாரத்தை காண்பிக்கவே உங்களை ஒரு உயர் அதிகாரியாக நினைத்து தான் நான் இங்கு வந்தேன் என்றுகூற
??‍♂️-தான் வேறு வேலையில் இருப்பதனால் இப்போ வரமுடியாது என்று தொலைபேசி உரையாடல் முடிவுக்கு வந்தது.
மறுநாள்(18/2/2021) மறுபடியும் காலை 7:10 ற்கு போனேன் அந்தநேரமும் அவர் அங்கு இல்லை கேட்டால் Quoters சென்றுவிட்டாரம்.??
காலை 11:20 மணிக்கு நேரே மல்லாகத்தில் உள்ள ASP அலுவலகத்துக்கு சென்று நடந்த அனைத்தையும் CCTV footage , அவர்கள் கதைத்த விதங்களையும் அத்துடன் என்னால் நீதிமன்றம் செல்ல இயலாது நீங்கள் உயர் அதிகாரி என்பதால் இப்படியான விடயங்களை தெரியவேண்டும் இதனால் பல அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர் என்றேன்..”
ASP??‍♂️-உட்காருங்கள் என்று கூறிவிட்டு அதற்குரிய அதிகாரிகளிற்கு அழைப்பை ஏற்படுத்தி கதைத்த பின்,CCTV யை வைத்து நான் எந்த முடிவும் எடுக்க முடியாது அதில் வாகன இலக்கமும் தெளிவாக இல்லை..!!
என்று சொல்லி KKS காவல் நிலையம் சென்று Ekanaya (எனது வாகனத்தை மறித்தவர்)
என்பவரை சந்தியுங்கள் அவர் ஏதாவது செய்வார் என்றார்
மீண்டும் KKS காவல்நிலையம் செல்ல
?‍♀️-மாத்தையா வாடிவென்ட..(கடும் மரியாதையுடன்)
?‍♂️-இங்கே உக்கார எனக்கு நேரமில்லை இந்த Video வ பாருங்கள் என்று காட்டினேன்,
அதை ஏற்றுக்கொள்ளாமல் சலாப்பலுடன் வேறு கதைகளை கதைத்து..!! (நான் நீதிமன்றம் செல்ல நேரப்பிரச்சனையுள்ளது என்பதை அறிந்து)
மாத்தையா உங்களை நீதிமன்றம் அனுப்ப விருப்பம் இல்லை சின்ன தண்டப்பணம் 1000ரூ வரும் ஓகே தானே..!!என்றார் ??
செய்யாத தவறுக்கு 1000ரூ தண்டமா?? உங்கள மாதிரி ஓருசில அரச ஊழியர் இருந்தால் நாடு நல்லா உருப்படும் நாட்டை நாசமாக்குங்க..!! என்று மனதில் இருந்த கோவத்தை கொட்டித்தீர்த்து விட்டு..!!
1100/- தண்டப்பணத்தை மிகுந்த மன வேதனையோடு செலுத்தினேன்.
இங்கே குறிப்பிட வேண்டியது என்னவெனில்..!!
நீங்கள் நினைக்கலாம் ஏன் நீதிமன்றம் செல்லவில்லை என்று..!!!
சென்றால் ஒருநாள் பூரா phone off பண்ணிட்டு இருக்க நீதிபதி கேட்பார் குற்றவாளியா ? சுற்றவாளியா?
நான்-சுற்றவாளி?
அடுத்த தவணை 1மாத்த்திக்கு பிறகோ / எப்பவோ தெரியாது..!!
மறுபடியும் நீதிமன்றம் அலுவலகத்தில 1 நாள் விடுமுறை, முழுநேரம் Phone off பண்ணிட்டு இருக்கவேண்டும் எதிராளி எப்படியும் ஏதாவது ஒரு காரணத்தை சாட்டி வருகை தரமாட்டார்.
வந்தாலும் வாகன இலக்கம் தெளிவில்லை அப்பிடி இப்படி சொல்லி இப்படியே இழுபடும்.
இதைவிட சட்டத்தரணி கட்டணம்& போக்குவரத்து செலவு என மேலும் பல…!!
இதனால் தான் என்னைப்போன்றோர் தவறிழைக்காவிட்டாலும் தண்டப்பணம் செலுத்த நேரிடுகின்றோம்..!!
இதே மாதிரி அனுவங்கள் மற்றும் பிரயோசனமான கருத்துக்களை கீழே comments பண்ணுங்கள்..!!
அனைவரையும் சென்றடைய இதை பகிருங்கள்
நன்றி ??????

 

No photo description available.May be an image of street, road and tree

முதலில் சிங்களத்தில் எழுதின தடக்கொலய வாங்கியே இருக்க கூடாது. தமிழில் தா என நின்று இருக்க வேண்டும்.
அடுத்து தண்ட பணம் + 10 வீதம் கொமிஷன் தபால் அலுவலகத்தில் செலுத்தினாலே கட்ட வேண்டும். அதே பிரதேச செயலகத்தில் என்றால் 10 வீதம் கட்ட தேவையில்லை.
ஏஎஸ்பி சரி வரலை என்றால் SSP கிட்ட போயிருக்கலாம். அவர்களிடம் எழுத்து மூல முறைப்பாடு கொடுத்த பின்னரும் நடவடிக்கை இல்லை எனில் முறைப்பாட்டின் கொப்பியுடன் பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறையிடலாம். பொலிஸ் முறைப்பாட்டு ஆணைக்குழு யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ளது.
” பொலிஸ் மா அதிபரிடம் சொல்லுங்கள்” என ஒரு இணைய சேவை உண்டு அதனூடாக பொலிஸ் மா அதிபரிடம் முறையிடலாம்.
நீதிமன்றம் செல்வதில் பலருக்கு நீங்கள் சொல்லும் நடைமுறை சிக்கல் உண்டு. ஆனால் நீதிமன்றில் நீங்கள் குற்றத்தை மறுத்தால் நீங்கள் நீதிமன்றுக்கு தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு செல்ல வேண்டிய நிலை உண்டு என்பதனை ஏற்கிறோம்.
அதேவேளை குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரும் நீதிமன்றுக்கு வர வேண்டும். அவர் இடமாற்றம் பெற்று எங்கு சென்றாலும் அவரும் நீதிமன்றம் வந்தே ஆக வேண்டும். உங்களை விட அவருக்கு தான் அலைச்சல் கூடாவாக இருக்கும்.
சட்டத்தரணிகள் இல்லாமல் நாமளே வாதடலாம். சட்டத்தரணிகள் வைக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. இப்படியான சில வழக்குகளுக்கு இலவசமாக வாதாட கூடிய சட்டத்தரணிகள் உண்டு.
நீங்கள் சட்டத்தரணியை வைத்து வாதாடி நாலைந்து தரம் நீதிமன்றுக்கு அலைந்து நீங்கள் சுற்றவாளி என தீர்ப்பு வந்து விட்டால் , வழக்கு செலவு / மனஉளைச்சல் என அந்த பொலிஸ் உத்தியோகஸ்தரிடம் இருந்தும் பொலிஸ் திணைக்களத்திடம் இருந்தும் பணத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.