புதினங்களின் சங்கமம்

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்து வாள்கள், மற்றும் கோடரிகளை பொலிஸார் மீட்டிருக்கின்றனர்.குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கள் இரவு 09.30 மணியளவில் மானிப்பாய் பொலிஸாரினால் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 2 கஜேந்திர கோடரிகள், நீளமான வாள் ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளபோதும், எவரும் கைது செய்யப்படவில்லை.
அது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆவா குழுக் காவாலிகள் தமது பேஸ்புக் மற்றும் வட்சப் குறூப்புக்களில் தங்களை ஆயுதப்பிரிவு, அரசியல் பிரிவு, நிதிப்பிரிவு, புலனாய்வுப்பிரிவு என பல பிரிவுகளாகப் பிரிந்து இயங்கி வருவதாக குறிப்பிட்டு வருகின்றனர்.