கிசு கிசுபுதினங்களின் சங்கமம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று மலசலகுழிக்குள் புதைத்த சிங்கள பெண்ணுக்கு நடந்த கதி!!

கந்ளாய்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ளக் காதலனுடன் இணைந்து கணவரை கொலைச் செய்து, சடலத்தை கழிவறைக் குழியில் மறைத்து வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவரும்,அவரது கள்ளக்காதலர் என சந்தேகிக்கப்படும் நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய கந்தலாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்றசன்புர பகுதியில் நேற்று இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் அங்குள்ள கழிவறை குழியிலிருந்து சடலமொன்றை மீட்டுள்ளனர். இதன்போது கழிவறை அருகில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளரும்,உயிரிழந்த நபரின் மனைவியும் இணைந்தே இந்த கொலையைச் செய்துள்ளதாக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கொல்லப்பட்டவர் கிரானேகம, தபுலுஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கைது செய்யப்பட்ட பெண் கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி தனது கணவரை கள்ளக்காதலர் எனத் தெரிவிக்கப்படும் நபரது வீட்டிற்கு அழைத்துச் சென்று மதுபானத்தை வழங்கியுள்ளார்.

குறித்த நபர் மதுபோதையில் மயக்கமடைந்த போது அவரை கழுத்தை நெறித்து, கத்தியால் குத்தி இவ்விருவரும் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் சடலத்தை சந்தேக நபரின் வீட்டின் அருகில் உள்ள கழிவறை குழிக்குள் மறைத்து வைத்ததாகவும் தெரியவந்துள்ளது. சடலம் இன்றய தினம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.