நாலக்க டி சில்வாவிற்கு பிணை
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைச்சதித்திட்டம் தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிற்கமைய அவர் இன்று பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.