யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பெண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!
யாழ்.தென்மராட்சியில் 12 வயதான சிறுமி மீது பலாத்கார முயற்சி செய்த நபரை பொதுமக்கள் அடித்து நொருக்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
42 வயதான இரு திருமணங்கள் முடித்த குறித்த நபர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்வதற்கு முயற்சித்துள்ளார். குறித்த விடயத்தை சிறுமி அம்பலப்படுத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த நபரை மடக்கிய பொதுமக்கள் அடித்து நொருக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

