புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் ஆட்டுக்குக் குழை வெட்டிய சிறுமி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு!! (Photos)

கிணற்று கட்டில் ஏறி ஆட்டுக்கு குழை வெட்டிய சிறுமி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் கரணவாய் அண்ணா சிலையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மாலை 6.00 மணியளவில் 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமி வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு குழை வெட்டுவதற்காக கிணற்றுக்கட்டில் ஏறி நின்று பூவரசம் குழை வெட்டியபோது அவர் கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

May be an image of 1 person, outdoors and treeMay be an image of body of waterMay be an image of 1 person, tree and body of water