பாடசாலையில் முதலாம் பிள்ளையாக வரும் 13 வயதான ஜெயசீலன் லக்ஷிகாவை ஒரு மாதகாலமாக காணவில்லை!! தாயார் கதறலுடன் கூறிய தகவல் இது!!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிட்ற்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான ஜெயசீலன் லக்ஷிகா ஏன்ற சிறுமி காணாமல் போய், ஒரு மாத காலமாகியும் வீடுதிரும்ப வில்லை என சிறுமியின் தாய் கவலை தெரிவித்துள்ளார்.

<

கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் சிறுமி ஜெயசீலன் லக்ஷிகா இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் ஒரு மாதத்திற்கு மேலாகியும் தனது மகளை பொலிசார் கண்டுபிடித்துத் தரவில்லை எனவும் இது தொடர்பாக திருகோணமலையில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவுசெய்துள்ள போதிலும் இதுவரை எவ்வித பயனும் இல்லையெனவும் தனது மகள் ஜெயசீலன் லக்ஷிகா விற்கு ஏதும் நடந்திருந்தால் இந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டுமெனவும் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு ஊடகங்களின் உதவியினை நாடி வந்துள்ளதாகவும் காணாமல் போன சிறுமி ஜெயசீலன் லக்ஷிகாவின் தாயார் தெரிவித்தார்.

இது தொடர்பில் நேற்று (11) காணாமல் போன சிறுமி ஜெயசீலன் லக்ஷிகாவின் தாயினால் திருகோணமலையில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்ப்பாடு செய்து இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தரம் 8ல் கல்விகற்று வந்த எனது மகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7ம் திகதி காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் மறுநாள் 8ம் திகதி முறைப்பாடு செய்திருந்தேன்.

எனினும் ஒரு மாதத்திற்கு மேலாகியும் எனது மகளை பொலிசார் இன்னும் கண்டுபிடித்துத் தரவில்லை. இது தொடர்பாக திருகோணமலையில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்திருக்கின்றேன். எனினும் எவ்வித பலனும் இல்லை.

எனது மகள் வகுப்பில் முதலாவது பிள்ளையாகத்தான் வருவார். நல்ல கெட்டிக்காரி. அவரை பல இடங்களிலும் நாங்களும் தேடிப் பார்த்தோம் காணவில்லை.

ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பார்க்கின்றபோது எனக்கு பயமாக இருக்கின்றது.

மேலும், எனது பிள்ளையை எப்படியாவது கண்டுபிடித்துத் தாருங்கள் என பொறுப்பான அனைத்து தரப்பினரிடமும் மன்றாட்டமாக கேட்டுக்கொள்வதாகவும் எனது பிள்ளைக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)