பருத்தித்துறை – துன்னாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல்; இளைஞர் படுகாயம்!!

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பருத்தித்துறை – துன்னாலை தக்குசம்பாதி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை(10) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் காண்டீபன் (வயது- 27) என்பவரே கைப் பகுதியில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)