மே மாதம் வரை தினமும் இரு மணி நேரம் மின்வெட்டு?
எதிர்வரும் மே மாதம் வரை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஐலண்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
.
எனினும், இம்மாத இறுதியில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மூன்றாவது ஜெனரேட்டர் அமைப்பு இணைக்கப்படும் போது நிலைமை மேம்படும் என அவர் மேலும் கூறினார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணையம் (PUC) நேற்று மின்சார சபைக்கு மின்வெட்டுக்கு அனுமதி அளித்தது.
சுமார் 5 நாட்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதால், அக்காலப்பகுதியில் மின்வெட்டு இருக்காது என மின்சார சபை தெரிவித்துள்ளது

