புதினங்களின் சங்கமம்

அம்பாறையில் தமிழரான நவீணன் உட்பட 3 பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் வெளியாகியது!!(Video)

அம்பாறை திருக்கோவில் காவல் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் உயிரிழந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் சாஜன் ஒருவர் வீடு செல்வதற்கு நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார்.

எனினும் அவருக்கு விடுமுறை வழங்கததால் கோபமடைந்த சாஜன் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் காவல்நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ’ துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத சக காவல்துறை அதிகாரிகள் அவரை தடுக்க முற்பட்ட போது அவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 காவல்துறை உத்தியோகத்தர்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

May be an image of 1 person and text

துப்பாக்கி சூட்டில் கல்முனை பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட அழகரட்ணம் நவீணன் (வயது -30) மரணம்..

 

.May be an image of 1 person and beardMay be an image of 1 person and indoorMay be an image of 1 person, indoor and text