ஆஸி. எம்.பியின் மேசையின் முன்னால் சுய இன்பம் ; சிக்கியது காணொளி

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் பழிவாங்கல் குற்றச்சாட்டு தொடர்பாக இரண்டு பொருட்களை நாடாளுமன்ற வளாகத்தினுள்ளிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

லிபரல் ஊழியர் ஒருவர், பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மேசையின் முன்னால் நின்று சுய இன்பம் அனுபவிக்கும் (செல்பி) காணொளி ஒன்று சனல் 10 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்தது.

கன்பெராவைச் சேர்ந்த ஒருவரே இந்த காணொளியை சனல் 10 தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்தார்.

இந்த காணொளி ஒளிபரப்பப்பட்டதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் பொலிஸில் முறைப்பாடு செய்தார். இந்த காணொளி ஒளிபரப்பப்பட்டதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்படாத அந்தரங்கப் படங்களைப் பகிர்தல் தொடர்பாக தேடுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த காணொளியை வழங்கிய நபரும் நாடாளுமன்ற ஊழியரும் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஓரினச்சேர்க்கை டேட்டிங் தளம் மூலம் நட்பாகி நாடாளுமன்ற கட்டிடத்தினுள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர் தனது 19 வயது மகள் தனியாக வீட்டிலிருந்த போது பொலிஸார் சோதனை நடத்தியதாக கூறியுள்ளார்.

பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது தனது மகளை தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தவும் அனுமதிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொண்டார் இப்போது பொலிஸ் அவரைத்தேடி வருகிறது. மற்ற படி அவர் குற்றவாளி அல்ல என சம்பந்தப்பட்ட நபரின் சட்டத்தரணி வாதிட்டார்.

error

Enjoy this blog? Please spread the word :)