யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இன்று (06) இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைத்துக்கொள்ள முடியும்.




