புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் பயங்கரம்!! வர்த்தகரின் மனைவி தயாவதியைக் கொலை செய்து தாலிக்கொடி களவெடுத்த தகப்பனும் மகளும்!! துரத்திப் பிடித்த ஆட்டோச் சாரதி!! நடந்தது என்ன? (

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலைசெய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு அரசடி, பார்வீதியில் உள்ள வீட்டிலேயே இந்த துயரச்சம்பவம் நடைபெற்றுள்ளது.குறித்த வீட்டுக்கு வழமையாக வருகைதந்து வேலைகள் செய்துவிட்டுச்செல்லும் தகப்பனும் மகளுமே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளது தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தகப்பனும் மகளும் பசிக்கிறது சாப்பாடு தாருங்கள் என்று கூறி குறித்த பெண்ணிடம் சாப்பாடு வாங்கி உண்ட பின்னரே இந்த கொலையினை செய்துள்ளனர்.

இன்று வீட்டுக்குவந்தவர்கள் குறித்த வீட்டில் வேலைகளை செய்துவிட்டு உணவு உண்டுகொண்டிருக்கும்போது திடிரென குறித்த வீட்டின் உரிமையாளர் பெண் மீது கத்தியால் சரமாரியாக வெட்டுள்ளதுடன் கழுத்தை வெட்டிய பின் தாலிக்கொடியை பிய்த்துள்ளதுடன் காதுகளை கழட்டமுடியாத நிலையில் அதனை வெட்டி எடுத்துச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் குறித்த பெண்னை கொலைசெய்துவிட்டு அங்கிருந்த தங்க நகைகளை களவாடிச்சென்றபோது வீதியில் நின்றவர்கள் அவர்களின் உடைகளில் இரத்தக்கறை உள்ளதை கண்டு சந்தேகம்கொண்டு துரத்திச்சென்று இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது 50வயதுடைய தயாவதி செல்வராஜா என்னும் பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட தடவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக குறித்த பகுதியில் பெருமளவு மக்கள் ஒன்றுகூடியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளதை காணமுடிந்தது.

கொலை செய்து விட்டு தப்பிய கொலையாளியை தனது முயற்சியால் ஓட்டோவில் சென்று தனியாக மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஓப்படைத்த இளைஞர்

வாழ்த்துக்கள்
நண்பரே உங்களை போன்றே அனைவரும் செயற்பட வேண்டும் காலத்தின் தேவை இப்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பல இடங்களில் கொலை கொள்ளை முயற்சிகள் இடம் பெறுகிறது
கிராமம் தோறும் இளைஞர்கள் விழிப்பாக செயற்படுவோம்…
கொலை செய்யப்பட்ட பெண்ணும்
கொலையாளியை துரத்திப் பபிடித்த இளைஞனும்…
May be an image of 1 person and text
May be an image of 2 people and outdoorsMay be an image of 3 peopleMay be an image of 8 people, people standing, motorcycle and roadMay be an image of 4 people, people standing, motorcycle, tree, street and roadMay be an image of 8 people, people standing, motorcycle and outdoorsMay be an image of 4 people, people standing, motorcycle and outdoorsMay be an image of 5 people, people standing and outdoorsMay be an image of 2 people, outdoors and text that says "天 POLICE Scene Of Officer Crime"May be an image of 5 people, people standing and outdoorsMay be an image of 4 people and outdoorsMay be an image of 5 people, people riding motorcycles, people standing, motorcycle, road and crowdMay be an image of 7 people, people standing, motorcycle and roadMay be an image of 4 people and outdoorsMay be an image of 4 peopleMay be an image of 7 people, people standing, motorcycle, car and road