Home பல்சுவை செய்திகள் யாழ்ப்பாண குடும்பப் பெண் அனுசா பிரான்சில் கணவனால் கொலை!! காவாலியுடன் தொடர்பு என சந்தேகம்!!

யாழ்ப்பாண குடும்பப் பெண் அனுசா பிரான்சில் கணவனால் கொலை!! காவாலியுடன் தொடர்பு என சந்தேகம்!!

பிரான்சில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 40 வயதான 3 பிள்ளைகளின் தாயாரான அனுஷா அவளது கணவனால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளாள். பிரான்சின் பாரிஸ் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஈவ்லின் (Yvelines) மாவட்டத்தின் ஆஷேர் (Achères) பகுதியில் அக்டோபர் 5, 2026 அன்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

40 வயதான அனுசா தனது 47 வயதான கணவன், பிள்ளைகளுடன் மிகவும் சந்தோசமாக சச்சரவு இன்றி வாழ்ந்து வந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் திடீரென நேற்று மனைவியை கணவன் கொலை செய்துள்ளார்.

மனைவியைக் கொலை செய்த பின்னர் தனது சகோதரருக்கு தொலைபேசியில் தொடர்பு எடுத்து தான் தனது மனைவியைக் கொன்றுவிட்டதாக கூறிய பின்னரே பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசாரும் தீயணைப்பு படையினரும் அனுசாவின் சடலத்தை மீட்ட பின் கணவனைக் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பிரான்ஸ்சிற்கு அகதியாக அண்மையில் சென்ற ஒரு காவாலி ஒருவன் அனுசாவுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகப்பட்டே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தமிழ்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

அனுசாவின் 3 சிறு பிள்ளைகளும் தற்போது தாய், தந்தையற்ற நிலையில் அநாதரவாக உள்ளதாகத் தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments