வவுனியாவில் ஏணையில் விளையாடிய சிறுமி கழுத்து இறுகியதால் மரணம்!
ஊஞ்சலாடுவதென்றால் பிள்ளைகளுக்குப் பிரியம் அதிகம், பெற்றோரின் மேற்பார்வையின்றேல் அதுவே உயிராபத்தாகி டுகின்ற நிலைமை தொடர்கின்றது.
கடந்த சில வருடங்களாக இவ்வாறான அகால மரணங்கள் பல நிகழ்ந்துள்ளன.
பெற்றோர்களே!
உங்கள் வீடுகளில் சிறுகுழந்தைகள் இருந்தால் ஏணைகள்,ஊஞ்சல்கள் குறித்து அவதானமாக இருங்கள்!
வவுனியா கந்தசுவாமி கோவில் வீதியை வதிவிடமாக கொண்ட பரமேஸ்வரன் (ரமேஷ்) சோபானா தம்பதிகளின் மூத்த புதல்வி.
அருட்சிகா அவர்கள் நேற்று 17.12.2021 வெள்ளிக்கிழமை ஏணை இறுகியதால் இறைவனடி சேர்ந்தார்.